'இந்த சண்டையில் சட்டை கிழியாது..' - இயக்குனர் லோகேஷுக்கு பதிலளித்த கவுதம் வாசுதேவ் மேனன்
|விக்ரம் படம் வந்த பிறகு அதுதான் முதலிடம் என்று இயக்குனர் கவுதம் மேனன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சென்னை,
கடந்த 2006-ம் ஆண்டு கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கமல் நடித்த 'வேட்டையாடு விளையாடு' திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ஜோதிகா, கமலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.
முன்னதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு மேடையில் பேசிய போது, 'நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகன் நான் தான். இதில் யார் போட்டிக்கு வந்தாலும் சட்டை கிழியும் வரை சண்டையிட தயார்' என்று கூறியிருந்தார். அதே மேடையில் கவுதம் மேனனும் தான் நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகர் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது 'வேட்டையாடு விளையாடு' படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பைப் பார்த்து ரசிகர் ஒருவர், "கமலின் தீவிர ரசிகர் யார் என்ற சண்டையில் முதலிடம் பிடித்தது கவுதம் வாசுதேவ் மேனன்தான் என தோன்றுகிறது. சாரி லோகேஷ்கனகராஜ்" என்று பதிவிட்டிருந்தார்.
'Was'
Until you and 'Nayagan meendum varaan' came. #Vikram
I have to try and rise above that.
Will be a good challenge @Dir_lokesh
Aana Intha sandaiyila satta kizhiyaadhu…
Only Love https://t.co/sVBB3IPQpI
இதற்கு பதிலளித்திருந்த லோகேஷ் கனகராஜ், "சந்தேகமே வேண்டாம். கவுதம் மேனன் தான் முதலிடம்" என பதிவிட்டிருந்தார். இந்த பதிலை மேற்கொள் காட்டி ட்வீட் செய்த கவுதம் மேனன், "லோகேஷ் கனகராஜ் வரும் வரை அப்படி இருந்தது. ஆனால் விக்ரம் படம் வந்த பிறகு அதுதான் முதலிடம். அதைத் தாண்ட வேண்டும். இது அரோக்கியமான போட்டியாக இருக்கும். ஆனால் இந்த சண்டையில் சட்டை கிழியாது. அன்பு மட்டுமே" என ஜாலியாக பதிவிட்டுள்ளார். இவர்களின் டுவிட்டர் உரையாடல் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.